செய்திகள்

1000 நாட்கள் ஆகியும் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் 195 நைஜிரிய மாணவிகள்

Published On 2017-01-09 04:52 IST   |   Update On 2017-01-09 04:52:00 IST
நைஜிரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 1000 நாட்கள் ஆகியும் இன்னும் விடுதலை செய்யப்படாத அவலம் நீடித்து வருகிறது.
அபுஜா:

நைஜிரியா நாட்டில் உள்ள போகோஹாராம் என்ற தீவிரவாத அமைப்பு தனிநாடு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இதற்காக அரசுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அவ்வவ்போது நடத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜீரிய பள்ளியில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவிகளை கடத்தி அந்த நாட்டையே நடுநடுங்க செய்தது.

கடத்தலுக்கு பிறகு மூன்று ஆண்டுகளில் 21 மாணவிகள் மட்டும் இதுவரை விடுதலை செய்யப்பட்டனர். அதில் பலர் கற்பமாக இருந்தனர். கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க நைஜிரிய அரசு உலக நாடுகளின் உதவியோடு தீவிர முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில், போகோ ஹாரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 1000 நாட்கள் ஆகியும் இன்னும் விடுதலை செய்யப்படாத அவலம் நீடித்து வருகிறது.

தீவிரவாதிகள் பிடியில் உள்ள மீதமுள்ள 195 பள்ளி மாணவிகள்  விரைவில் மீட்போம் என்று நைஜிரியா அதிபர் முகம்மது புகாரி நம்பிக்கை தெரிவித்தார். 

Similar News