செய்திகள்

தீவிரவாதிகளை அடக்குவதில் பாகிஸ்தான் அரசு தோல்வி: சுப்ரீம் கோர்ட்டு அறிக்கை

Published On 2016-12-17 04:50 GMT   |   Update On 2016-12-17 04:50 GMT
தீவிரவாதிகளை அடக்குவதில் பாகிஸ்தான் அரசு தோல்வி அடைந்து விட்டது என சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

கடந்த ஆகஸ்டு மாதம் பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் பலியானார்கள். இதுகுறித்து விசாரணை நடத்த அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 45 அதிகாரிகள் அடங்கிய கமி‌ஷன் அமைத்தது.

அந்த கமி‌ஷன் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் 86 பக்க அறிக்கை தாக்கல் செய்தது.

அதில் பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய தீவிரவாத தடுப்பு துறை தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் அடக்க தவறிவிட்டது.

அதன் விளைவு தற்போது உடனடியாக தெளிவாக தெரியவில்லை. அதே நேரத்தில் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்கங்கள் பகிரங்கமாக செயல்படவும், பேரணி நடத்தவும் உளவுத்துறையும், சட்ட அமலாக்க பிரிவும் எப்படி அனுமதிக்கிறது. ஏன் என்று புரியவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த 2014-ம் ஆண்டு பெஷாவர் ராணுவ பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய 2-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 140 பள்ளி குழந்தைகள் உள்பட 154 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News