செய்திகள்

அமெரிக்காவில் இந்திய தொழிலாளர்களுக்கு வேலை: டிஸ்னி நிறுவன அதிகாரி மீது வழக்கு

Published On 2016-12-16 04:54 GMT   |   Update On 2016-12-16 04:55 GMT
அமெரிக்காவில் இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிய டிஸ்னி நிறுவன அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் உள்ள ‘டிஸ்னி’ நிறுவனம் கார்ட்டூன் படங்களை தயாரிப்பதில் பிரசித்தி பெற்றன. இங்கு பணிபுரிந்த அமெரிக்க தொழிலாளர் ஒருவர் புளோ ரிடாவில் உள்ள கோர்ட்டில் அந்த டிஸ்னி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபரில் டிஸ்னி நிறுவனம் ஓர்லண்டோவில் பணிபுரிந்த 250 தொழில்நுட்ப நிபுணர்களை 90 நாட்களில் பணி நீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது.

அதற்குள் எச்-1பி விசா’ மூலம் அமெரிக்கா வந்த இந்திய தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வழங்கியுள்ளது.

இதன் மூலம் இந்நிறுவனம் எங்களை அவமதித்துள்ளது. பணிக்கு எதிரான சூழலை உருவாக்கியுள்ளது. அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களாகிய நாங்கள் மன உளைச்சல் அடைந்திருக்கிறோம். வருமானம் இழப்பு, வேலை இழப்பு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்டவைகளால் பாதிக் ப்பட்டுள்ளோம். எனவே இந்நிறுவனம் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Similar News