செய்திகள்

வியட்நாமில் பஸ்சில் கடத்தப்பட்ட 120 நாகப்பாம்புகள் பறிமுதல்

Published On 2016-11-26 09:10 GMT   |   Update On 2016-11-26 09:10 GMT
வியட்நாமில் டக்நாங் மாகாணத்தில் பஸ்சில் கடத்தப்பட்ட 120 நாகப்பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கனோய்:

வியட்நாமில் டக்நாங் மாகாணத்தில் பஸ்சில் நாகப்பாம்புகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அந்த பஸ்சை போலீசார் மடக்கி நிறுத்தினர்.

அதில் 4 பேர் மட்டுமே இருந்தனர். பின்னர் பஸ்சை சோதனை செய்த போலீசார் அங்கிருந்த 15 பிளாஸ்டிக் பெட்டிகளை கைப்பற்றி சோதனை நடத்தினர். அதில் உயிருடன் 120 நாகப் பாம்புகள் இருந்தன.

வி‌ஷத் தன்மையுள்ள அவை பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியது. எனவே அவற்றை பஸ் போன்ற வாகனங்களில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே கடத்தப்பட்ட நாகப் பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றின் மொத்த எடை 220 கிலோ. வியட்நாமில் நாகப்பாம்புகள் இறைச்சிக்காகவும், பாரம்பரிய மருந்துகளுக்காகவும் அதிக அளவில் கொன்று அழிக்கப்படுகின்றன. அதற்காக இவை கடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

Similar News