அமெரிக்க புதிய அதிபர் டிரம்ப்-புதின் டெலிபோனில் பேச்சு
வாஷிங்டன்:
சமீபத்தில் நடந்த தேர்தலிலும் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் (70) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைதொடர்ந்து இவரின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் டெலிபோனில் பேசி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்த தகவலை டிரம்ப் தனதுஅறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். அதில் 2 நாட்டு தலைவர்களும் பொருளாதார பிரச்சினைகள், வரலாற்று சிறப்பு மிக்க அமெரிக்க- ரஷியா உறவு, தீவிரவாத மிரட்டல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது.
ரஷியாவுடனும், அந்நாட்டு மக்களுடனும் தான் பலமான நிலையான உறவு வைத்துக்கொள்ள விரும்புவதாக புதினிடம் தான் தெரிவித்தாகவும் டிரம்ப் அறிக்கையில் கூறியுள்ளார்.
அதே போன்று ரஷியாவின் கிரம்ளின் மாளிகை (அதிபர் மாளிகை) செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அதிபர் புதின் டிரம்புடன் டெலிபோனில் பேசினார் என்றும், அப்போது இயல்பான சூழ்நிலை உருவாக இரு நாட்டு தலைவர்களும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரது அறிக்கையிலும் உலகின் முதல் எதிரியான சர்வதேச தீவிரவாதத்தை ஒழிக்க இணைந்து பாடுபட போவதாக கூறப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றவுடன் ரஷிய அதிபர் புதின் அவருக்கு உடனடியாக வாழ்த்து தெரிவித்தார். வெற்றி செய்தி அறிந்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு தந்தி அனுப்பினார். இதற்கிடையே டிரம்பும்-புதினும் நேரடியாக சந்திக்க இப்போதே ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.