செய்திகள்

தடபுடலான விருந்துடன் ஐ.நா.சபையில் தீபாவளி கொண்டாட்டம்: பான் கி மூன் உள்பட 1000 பேர் பங்கேற்பு

Published On 2016-10-30 09:11 IST   |   Update On 2016-10-30 09:11:00 IST
இந்தியாவின் சிறப்புக்குரிய திருநாளான தீபாவளி பண்டிகை ஐக்கிய நாடுகள் சபையில் தடபுடலான விருந்துடன் எழுச்சியாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.
நியூயார்க்:

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபங்கள் மற்றும் மின்விளக்கு அலங்காரத்தில் ஐ.நா. சபை வளாகம் வண்ணமயமாக காட்சி அளித்தது.

ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஹர்தீப் சிங் பூரி ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் உலகின் பலநாடுகளை சேர்ந்த தூதர்கள், அமெரிக்க அரசு அதிகாரிகள் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொடியுடன் நடனக் கலைஞர்கள் பிரபல இந்திப் பாடல்களுக்கு நடனடமாடி விருந்தினர்களை மகிழ்வித்தனர்.

மலர்களால் வரையப்பட்ட வண்ணமயமான கோலங்கள் மற்றும் தீபஒளியால் அலங்கரிக்கப்பட்டிருந்த விருந்து மண்டபத்தில் இந்தியாவின் பல மாநிலங்களில் மிகவும் பிரசித்தியான சைவ-அசைவு உணவு வகைகள் மற்றும் இனிப்பு வகைகளை விருந்தினர்கள் ருசித்து மகிழ்ந்தனர்.

Similar News