செய்திகள்

ஒரே வெடியில் 5 டன் போதைப் பொருட்களை அழித்த ஆப்கானிஸ்தான் அதிகாரிகள்

Published On 2016-10-16 20:01 GMT   |   Update On 2016-10-16 20:01 GMT
ஹெராயின், ஹஷிஷ், ஆல்கஹால் உள்ளிட்ட பல்வேறு வகையான 5 டன் போதைப் பொருட்களை வெடி வைத்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் நேற்று அழித்தனர்.
காபூல்:

ஹெராயின், ஹஷிஷ், ஆல்கஹால் உள்ளிட்ட பல்வேறு வகையான 5 டன் போதைப் பொருட்களை வெடி வைத்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் நேற்று அழித்தனர்.

ஆப்கானிஸ்தானில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ஆப்கன் போலீஸ் அதிகாரி அயுப் அன்சாரி கூறுகையில், “இந்த நடவடிக்கை போதைப் பொருட்களை கட்டுப்படுத்த நாங்கள் எடுத்துக் கொண்ட செயல் ஆகும். போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என்றார்.

ஒரு டன் ஹெராயின் மதிப்பு போதைப்பொருள் மற்றும் குற்றநடவடிக்கை தொடர்பான ஐ.நா. அலுவலத்தின் தகவல்படி ஐரோப்பிய சந்தையில் சுமார் 40 மில்லியன் யூரோ ஆகும்.

ஒரு பக்கம் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்தாலும், கடந்த ஆண்டு உலகின் போதை பொருள் தேவையில் 80 சதவீதம் ஆப்கானிஸ்தான் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News