செய்திகள்

எகிப்தில் ராணுவம் குண்டு வீச்சில் 100 தீவிரவாதிகள் பலி

Published On 2016-10-16 05:12 GMT   |   Update On 2016-10-16 05:12 GMT
எகிப்தில் ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் 100 தீவிரவாதிகள் பலியாகினர். 40 பேர் காயம் அடைந்தனர்.
கெய்ரோ:

எகிப்தில் சினாய் தீப கற்ப பகுதியில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. எனவே, அவர்களை ஒழிக்க ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று வடக்கு சினாய் தீபகற்ப பகுதியில் ரபா, ஷேக் ஷூவை யத் மற்றும் அல்-அரீஷ் ஆகிய தீவிரவாதிகள் முகாம்கள் மீது ராணுவ போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

அதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகினர். 40 பேர் காயம் அடைந்தனர். சினாய் துறைமுகம் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்து குடோன்களும் குண்டு வீச்சில் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த தகவலை எகிப்து ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோதனைச்சாவடியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதில் 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்க இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

Similar News