செய்திகள்

பாகிஸ்தானில் இந்திய தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்ப தடை

Published On 2016-09-01 16:50 IST   |   Update On 2016-09-01 16:50:00 IST
பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
 இஸ்லாமாபாத்:

இந்திய சேனல்கள் மீது விதிக்கப்பட்ட தடை குறித்து பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் அப்சர் அலாம் கூறுகையில் 'பொதுமக்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடத்தை விதிகளை தொடர்ச்சியாக மீறும் தொலைக்காட்சி சேனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இன்றிலிருந்து அக்டோபர் 15-ம் தேதிவரை இந்திய சேனல்களை ஒளிபரப்பிக் கொள்ளலாம். அதற்குமேல் சட்டத்திற்கு புறம்பாக இந்திய சேனல்களை ஒளிபரப்பும் சேனல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

அதன்பின்னர் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உரிமம் வைத்திருக்கும் சேனல்கள் ஆறு சதவீதம் என்ற அளவில் மட்டுமே இந்திய சேனல்களிடம் இருந்து நிகழ்ச்சிகளை பெற்று ஒளிபரப்ப வேண்டும்.

நான் பொதுமக்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். நமது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எதிரான இந்திய டிஷ்களை பயன்படுத்தி தொலைக்காட்சி பார்ப்பதை தவிருங்கள்’ என்றார்.

இந்திய படங்கள், நாடகங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஆகியவற்றிற்கு பாகிஸ்தானில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News