செய்திகள்

வடகொரியாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு தண்டனை

Published On 2016-08-27 23:04 GMT   |   Update On 2016-08-27 23:04 GMT
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களை தண்டிக்கும் விதமாக, அவர்களை நிலக்கரி சுரங்கங்களில் கூலித்தொழிலாளியாக வேலைக்கு அமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சியோல்:

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தென் கொரியா 9 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம், 9 வெண்கலப்பதக்கம் என 21 பதக்கங்களை குவித்தது.

ஆனால் அதன் பரம எதிரியான வடகொரியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் திருப்தி அடைய வேண்டியதாகி விட்டது. 

ஒலிம்பிக் போட்டிக்கு குழுவினரை அனுப்பி வைத்தபோது, கண்டிப்பாக குறைந்தபட்சம் 17 பதக்கங்களையாவது வென்று வர வேண்டும் என்று வடகொரிய வீரர்களிடம் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் சொல்லி அனுப்பினார். ஆனால் 7 பதக்கங்களை மட்டுமே வடகொரிய வீரர்களால் வெல்ல முடிந்திருப்பது, கிம் ஜாங் அன்னுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் பதக்கம் வெல்லாத வீரர்களை தண்டிக்கும் விதமாக, அவர்களை நிலக்கரி சுரங்கங்களில் கூலித்தொழிலாளியாக வேலைக்கு அமர்த்த கிம் ஜாங் அன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி வடகொரிய வல்லுனர் டோஷிமிட்சு ஷிகேமுரா கூறும்போது, 'ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வீடு, கார் மற்றும் பிற பரிசுகள் வழங்கப்படும். அதே நேரத்தில் பதக்கம் வெல்லாதவர்கள் மீது கோபம் கொண்டுள்ள கிம் ஜாங் அன், அவர்களை வசதிகள் குறைவான வீடுகளுக்கு இட மாற்றம் செய்வதுடன், அவர்களுக்கு வழங்கப்படுகிற சலுகைகளை குறைத்துக்கொள்ளவும் முடிவு செய்துள்ளார்' என குறிப்பிட்டார்.

Similar News