செய்திகள்

ரியோ டி ஜெனீரோவில் பத்திரிகையாளர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் - பதற்றம்

Published On 2016-08-10 09:07 IST   |   Update On 2016-08-10 10:44:00 IST
ஒலிம்பிக் போட்டிகளை சேகரிக்க பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியோ டி ஜெனீரோ:

ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி வெளிநாட்டு பத்திரிகையாளர்களை பஸ் மீது  சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த பஸ்சின் இரு கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின.

இந்த தாக்குதலில் 12 பத்திரிகையாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த பஸ்சின்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா?, அல்லது, கல்வீச்சு சம்பவத்தில் பஸ் சேதமடைந்ததா? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ டி ஜெனீரோ நகரில் ஏற்கனவே பாதுகாப்பு படைகளை சேர்ந்த சுமார் 85 ஆயிரம் பேர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News