செய்திகள்

நேபாள எல்லைக்குள் புகுந்த இந்திய போலீசார் 5 பேர் கைது

Published On 2016-04-25 06:45 IST   |   Update On 2016-04-25 06:45:00 IST
எல்லை தாண்டி சென்றதற்காக இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இந்திய போலீசார் 5 பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காட்மண்டு:

நேபாள நாட்டின் சனகன் பகுதியில் இந்தியாவை சேர்ந்த 5 போலீசார், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதில் இன்ஸ்பெக்டரும் ஒருவர்.

குற்றவாளிகள் சிலரை தேடி நேபாள எல்லைக்குள் இந்திய போலீசார் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாற்று உடை அணிந்திருந்த இந்திய போலீசாரிடம் ஆயுதங்கள் இருந்ததாக நேபாள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை அச்ஹம் பகுதியில் அவர்கள் தேடிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்.

இந்திய போலீசாரிடம் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்களை நேபாள போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News