உலகம்

பாகிஸ்தான் கனமழை: நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி

Published On 2024-08-30 21:50 IST   |   Update On 2024-08-30 21:50:00 IST
  • பாகிஸ்தானில் கனமழை பெய்து வருகிறது.
  • இதனால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்றவை ஏற்படுகிறது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் சில பகுதிகள் தற்போது பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் பல மாவட்டங்களில் நிலச்சரிவு போன்றவற்றை எதிர்கொண்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் இன்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் ஒரு வீட்டின் மேல் கூரை சரிந்தது. இந்தச் சம்பவத்தில் 3 பெண்கள், 6 குழந்தைகள், 3 ஆண்கள் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.

விசாரணையில், இந்த விபத்தில் உயிரிழந்த 12 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News