செய்திகள்
ஐபோன் 13

ஏ15 பயோனிக் பிராசஸர் கொண்ட ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி அறிமுகம்

Published On 2021-09-14 23:31 IST   |   Update On 2021-09-14 23:31:00 IST
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஏ15 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கின்றன.


ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய மாடல்களில் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸரில் 16 கோர் நியூரல் என்ஜின் உள்ளது.

புதிய பிராசஸருடன் ஐபோன் 13 மாடலில் 12 எம்பி வைடு கேமரா சென்சார் உள்ளது. ஐபோன் 13 மாடலில் உள்ள சினிமேடிக் வீடியோ அம்சம் சினிமா தர வீடியோக்களை படமாக்க வழி செய்கிறது. ஆப்பிள் நிகழ்வில் இந்த மோட் கொண்டு படமாக்கப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டது. 



2021 ஐபோன் மாடலில் 5ஜி தொழில்நுட்பம் முன்பை விட அதிக பேண்ட்களை சப்போர்ட் செய்கிறது. இதற்கென புது ஐபோனில் பிரத்யேக உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் உள்ள பேட்டரி முந்தைய மாடலை விட 2.5 மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது. ஐபோன் 13 மினி பேட்டரி முந்தைய ஐபோன் 12 மினி மாடலை விட 1.5 மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது. 

புதிய ஐபோன் சீரிசில் மேம்பட்ட மேக்சேப் அம்சம் உள்ளது. ஐபோன் 13 மினி 128 ஜிபி விலை 699 டாலர்கள் என்றும் ஐபோன் 13 விலை 799 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

Similar News