செய்திகள்
ட்விட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கு ஹேக் ஆனது எப்படி?
ட்விட்டரின் சி.இ.ஓ. ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கு மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டது எப்படி என்பதை பார்ப்போம்.
உலகில் உள்ள அனைவராலும் பரவலாக பயன்படுத்தும் ஒரு இயங்கு தளம் ட்விட்டர் ஆகும். முக்கிய தகவல்களை பரிமாறும் தளமாக ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்த ட்விட்டரின் சி.இ.ஓ ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கே, மர்ம நபர்களால் நேற்று மதியம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட அவரது கணக்கில் இருந்து இனத்தூண்டலை பிரதிபலிக்கும் விதமாக சில தகவல்கள் பகிரப்பட்டன. சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக இந்த ட்விட்டுகள் பகிரப்பட்ட நிலையில், அதன் பின்னர் தானாகவே அழிக்கப்பட்டன.
ட்விட்டர் கணக்குடன் இணைக்கப்பட்ட ஜானின் செல்போனே ஹேக் செய்யப்பட்டதற்கான காரணம். க்ளவுட் ஹோப்பர் வழியாக ஹேக்கர்கள் கணக்கில் ஊடுருவியுள்ளனர். முதலில் ஜாக் டோர்சேவின் செல்போன் எண்ணை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அவர்கள், எஸ்.எம்.எஸ் மூலம் ட்விட் பதிவாகும்படி செய்துள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கே ஹேக் ஆகியிருப்பது பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து ட்விட்டர் பாதுகாப்பு அம்சங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ட்விட்டர் பயனாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து ட்விட்டர் நிறுவனம் கூறுகையில், ‘ஜாக்கின் கணக்கு தற்போது முழு பாதுகாப்புடன் உள்ளது. ட்விட்டர் செயல்பாடுகள் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ட்விட்டர் தரப்பில் தவறில்லை.