செய்திகள்

வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தில் புதிய அம்சங்கள்

Published On 2019-01-07 06:45 GMT   |   Update On 2019-01-07 06:45 GMT
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தின் பீட்டா பதிப்பில் புதிய வசதிகள் சோதனை செய்யப்படுகிறது. #Whatsapp #Apps
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பீட்டா பயனர்களுக்கு புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய 2.19.10.21 அப்டேட் மூலம் பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகள் கிடைக்கின்றன.

அந்த வகையில் புதிய அம்சங்கள் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம். இந்த அப்டேட் மூலம் செயலியில் சில முக்கிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, செயலியின் ஒட்டுமொத்த அனுபவமும் மேம்படுத்தப்படலாம் என தெரிகிறது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஜிஃப்களில் ஸ்டிக்கர்களை சேர்க்க முடியும். இதில் பயனர்கள் நேரம், இருப்பிடம் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளில் கிடைக்கும் தனிப்பட்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும். இந்த அப்டேட்டில் ஸ்டிக்கர்களை தேர்வு செய்ய புதிய வடிவமைப்பு கொண்ட பகுதி வழங்கப்படுகிறது.


புகைப்படம் நன்றி: WABetaInfo

இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே இந்த அம்சம் தெரிகிறது. இதுதவிர குரூப்களில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. தற்சமயம் இந்த அம்சம் கொண்டு பயனர் தேர்வு செய்யும் குறுந்தகவல்களுக்கு வாட்ஸ்அப் தானாக புதிய சாட் ஸ்கிரீனை திறக்கும். இதில் பயனர்கள் தனிப்பட்ட முறையில் பதில் அளிக்க முடியும்.

இத்துடன் ஸ்டேட்டஸ்களை சரிபார்ப்பதற்கென டெவலப்பர்கள் புதிய வழிமுறையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் வழக்கமாக பயனர்கள் 3D ஃபோர்ஸ் முறையில் வாட்ஸ்அப் கான்டாக்ட்கள் அனுப்பும் குறுந்தகவல்களை சரிபார்ப்பதை போன்று இயங்கும். எனினும், தற்சமயம் இந்த அம்சம் 3D டச் தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.  #Whatsapp #Apps
Tags:    

Similar News