செய்திகள்

168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை

Published On 2018-10-22 04:26 GMT   |   Update On 2018-10-22 04:26 GMT
வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் அறிவித்து இருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு 168 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. #Vodafone
வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.597 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 10 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது.

168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 10 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த சலுகையின் வேலிடிட்டி 112 நாட்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய சலுகை பெருமளவு டேட்டா பயன்படுத்தாத ஃபீச்சர் போன் பயனர்களுக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் புதிய சலுகை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி புதிய வோடபோன் சலுகை ஏர்டெல் ரூ.597 சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வோடபோன் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி. அழைப்புகளை இந்தியா முழுக்க வழங்குகிறது.

எனினும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் தினமும் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே வாய்ஸ் கால் பேச முடியும். வாரம் முழுக்க வாய்ஸ் கால் பேசும் அளவு 16.6 மணி நேரங்கள் ஆகும். புதிய வோடபோன் சலுகை நாடு முழுக்க வோடபோன் 4ஜி சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.

இதேபோன்று ஏர்டெல் வழங்கும் சலுகை வாய்ஸ் கால் பேச எவ்வித கட்டுப்பாடும் விதிப்பதில்லை, மேலும் வேலிடிட்டி காலம் 168 நாட்களுக்கு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.  #Vodafone
Tags:    

Similar News