செய்திகள்

ஹேக்கர்களிடம் வாடிக்கையாளர்களின் விவரங்களை பறிகொடுத்த ப்ரிட்டிஷ் ஏர்வேஸ்

Published On 2018-09-07 06:51 GMT   |   Update On 2018-09-07 06:57 GMT
ஆகஸ்டு முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் பயன்படுத்திய சுமார் 3.8 லட்சம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. #Hacking



ஆகஸ்டு 21-ம் தேதி முதல் செப்டம்பர் 5 வரை ப்ரிடிஷ் சேவையை பயன்படுத்தியவர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் அபகரிக்கப்பட்டு இருப்பதாக ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்கள் நீடித்த ஹேக்கிங்கில் வாடிக்கையாளர்களின் பயண விவரங்களோ அல்லது பாஸ்போர்ட் விவரங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹேக்கிங் குறித்து உடனடியாக விசாரணை துவங்கப்பட்டு இருப்பதாகவும் ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.



"ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் மொபைல் ஆப் பயன்படுத்திய வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் வர்த்தக விவரங்கள் திருடப்பட்டு விட்டன," என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"ஹேக் சரி செய்யப்பட்டு வலைத்தளம் இப்போது இயல்பாக இயங்கி வருகிறது. ஹேக்கிங் சார்ந்த விவரங்கள் காவல் துறை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்." என தெரிவித்துள்ளது.

ஹேக்கிங்கில் சிக்கியதாக நினைக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி அல்லது கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனங்களை தொடர்பு கொண்டு, பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை தெரிந்து கொள்ள ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவுறுத்தியுள்ளது. 

இழப்பீடு வழங்குவது தொடர்பாக விரைவில் வாடிக்கையாளர்களை ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் தொடர்பு கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Hacking 

Tags:    

Similar News