செய்திகள்

ரூ.501 விலையில் ஜியோபோன் விற்பனை துவங்கியது

Published On 2018-07-21 04:41 GMT   |   Update On 2018-07-21 05:07 GMT
ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் மான்சூன் ஹங்காமா எனும் புதிய சலுகையில் ரூ.501 விலையில் ஜியோபோன் விற்பனை செய்யப்படுகிறது. #JioPhone #offers



ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மான்சூன் ஹங்காமா (Monsoon Hungama) எனும் சலுகையை அறிவித்தார்.

புதிய சலுகையின் கீழ் பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் பழைய மொபைல் போன்களை எக்சேஞ்ச் செய்து புத்தம் புதிய ஜியோபோனினை ரூ.501 விலையில் வாங்க முடியும். இந்தியாவில் ஜியோபோன் ரூ.1500 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் புதிய சலுகையின் கீழ் ரூ.501 விலையில் ஜியோபோன் விற்பனை செய்யப்படுகிறது.



ஜியோ அறிவித்திருக்கும் மான்சூன் ஹங்காமா சலுகையின் முழு விவரங்கள்:

- மான்சூன் ஹங்காமா எக்சேஞ் சலுகையின் மூலம் ஜியோபோனினை ரூ.501 செலுத்தி வாங்க முடியும்.

- மூன்று ஆண்டுகளில் திரும்ப வழங்கி ரூ.501 கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ள முடியும், அந்த வகையில் ஜியோபோன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

- பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்திய வோல்ட்இ வசதியில்லாத பழைய 2ஜி, 3ஜி, 4ஜி மொபைல் போன்களை கொடுத்து ரூ.501 சலுகையை பெற முடியும்.

- பயனர்கள் வழங்கும் பழைய மொபைல் போன் சீராக இயங்க வேண்டும் என்பதோடு, மொபைலுக்கு உரிய சார்ஜரை வழங்க வேண்டும்.

- புதிய ஜியோ போன் வாங்கும் விற்பனை மையத்தில் பயனர்கள் தங்களின் பழைய மொபைல் போனை வழங்க வேண்டும்.

- பயனர்கள் வழங்கும் பழைய மொபைல் போன் சீராக இயங்குவதோடு, அதன் பாகங்கள் உடையாமலும், மற்றபடி எதுவும் ஏற்பட்டிருக்க கூடாது. இத்துடன் பழைய மொபைல் போன் 2015, ஜனவரி 1-ம் தேதி மற்றும் அதற்கும் பின் வாங்கப்பட்டு இருக்க வேண்டும்.

- ஜியோபோன் அல்லது சி.டி.எம்.ஏ. (CDMA) அல்லது ஆப்பரேட்டர் லாக் (குறிப்பிட்ட நிறுவன சிம் மட்டுமே வேலை செய்யக்கூடிய மொபைல்கள்) செய்யப்பட்ட சாதனங்களை ஜியோ மான்சூன் ஹங்காமா சலுகையின் கீழ் எக்சேஞ் செய்ய முடியாது.

- பழைய மொபைல் போனுடன் பேட்டரி மற்றும் சார்ஜர் தவிர மற்ற உபகரணங்கள் அதாவது ஹெட்செட் போன்றவற்றை பயனர்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை.



மான்சூன் ஹங்காமா ஜியோபோன் சிறப்பு சலுகை:

மான்சூன் ஹங்காமா சலுகை ஜியோபோனினை ரூ.501 விலையில் வழங்குவதோடு அன்லிமிட்டெட் வாய்ஸ் மற்றும் 90 ஜிபி டேட்டா (தினமும் 0.5 ஜிபி டேட்டா) 6 மாதங்களுக்கு வழங்குகிறது. இந்த சலுகையை பெற பயனர்கள் புதிய ஜியோபோனை ஆக்டிவேட் செய்யும் போது ரூ.594 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

கூடுதலாக ஜியோபோன் பயனர்கள் மான்சூன் ஹங்காமா சலுகையுடன் ரூ.101 கூடுதலாக செலுத்தினால் 6 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.99 விலையில் தனி சலுகை ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் தினமும் 0.5 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

இன்று (ஜூலை 21-ம் தேதி) முதல் வழங்கப்படும் ஜியோபோன் மான்சூன் ஹங்காமா சலுகையின் மூலம் ஜியோபோன் பயனர்கள் தங்களது டெலிகாம் செலவில் கிட்டத்தட்ட 50% வரை சேமிக்க முடியும் என ஜியோ தெரிவித்துள்ளது. #JioPhone #offers
Tags:    

Similar News