செய்திகள்

ஹெச்.பி. ஸ்பெக்டர் சீரிஸ் லேப்டாப்: சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம்

Published On 2018-01-09 13:07 IST   |   Update On 2018-01-09 13:07:00 IST
ஹெச்.பி. நிறுவனத்தின் இரண்டு புதிய லேப்டாப் மாடல்கள் அமெரிக்காவில் நடைபெறும் சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
லாஸ் வேகாஸ்:

ஹெச்.பி. நிறுவனம் புதிய ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 15 கன்வெர்டிபிள் லேப்டாப் மற்றும் ஹெச்.பி. என்வி X2 ஹைப்ரிட் லேப்டாப் சாதனங்களை லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறு்ம சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்பெக்டர் X360 15 லேப்டாப் மட்டுமின்றி ஹெச்.பி. என்வி X2 ஹைப்ரிட் லேப்டாப் மற்றும் பல்வேறு இதர சாதனங்களை ஹெச்.பி. நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

புதிய ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 15 லேப்டாப் 8-ம் தலைமுறை கோர் i7-8705G பிராசஸர் மற்றும் ரேடியான் RX வேகா M கிராஃபிக்ஸ் கொண்ட உலகின் முதல் லேப்டாப் ஆகும். ஸ்பெக்டர் X360 லேப்டாப் 12 மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. 



இதன் மற்றொரு மாடலில் 8-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் மற்றும் என்விடியா ஜீஃபோர்ஸ் MX 150 டிஸ்கிரீட் கிராபிக்ஸ் வழஙஅகப்பட்டுள்ளது. இந்த மாடல் 13.5 மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.  

புதிய 2 இன் 1 லேப்டாப் அலுமினியம் CNC மெஷின்டு சேசிஸ், 19.5 மில்லிமீட்டர் ப்ரோஃபைல் வழங்கப்பட்டிருக்கிறது. ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 15 மாடல் டார்க் ஆஷ் சில்வர் மற்றும் காப்பர் லூக்ஸ் அக்சென்ட் என ஒற்றை நிறத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.  

15.6 இன்ச் 4K 2160x3840 பிக்சல் UHD தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 4 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை IR கேமரா, விண்டோஸ் ஹெல்லோ மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 2.1 கிலோ எடை கொண்டிருக்கும் இந்த லேப்டாப் அமெரிக்காவில் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்றும் இதன் விலை 1369.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.87,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



ஹெச்.பி. என்வி X2 ஹைப்ரிட்:

ஹெச்.பி. என்வி X2 மாடல் ஆல்வேஸ் கனெக்டெட் கணினி ஆகும். இதில் ஃபேன்லெஸ் CNC மெஷின்டு அலுமினியம் ஷெல் கொண்டுல்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஆல்வேஸ் கனெக்டெட் விண்டோஸ் கணினியின் லேப்டாப் மாடல் ஆகும். 

ஹைப்ரிட் மாடலில் 12.3 இன்ச் WUXGA+ டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த லேப்டாப் 7-ம் தலைமுறை இன்டெல் கோர் Y-சீரிஸ் பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. ஹைப்ரிட் மாடல் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும். 

இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி 17 மணி நேர பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வைஃபை, மேம்படுத்தப்பட்ட எல்.டி.இ. சப்போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய ஹெச்.பி. என்வி X2 766 கிராம் எடை கொண்டுள்ளது.

Similar News