செய்திகள்

புத்தம் புதிய குரோம்புக் உருவாக்கும் சாம்சங்

Published On 2017-11-21 11:34 IST   |   Update On 2017-11-21 11:35:00 IST
சாம்சங் நிறுவனம் குரோம்புக் லேப்டாப் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சாதனம் சமீபத்தில் அறிமுகமான கூகுள் பிக்சல்புக் போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.
புதுடெல்லி:

சாம்சங் நிறுவனம் கழற்றக்கூடிய வசதி கொண்ட குரோம்புக் லேப்டாப் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாம்சங் குரோம்புக் பார்க்க சமீபத்தில் அறிமுகமான கூகுள் பிக்சல்புக் போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

குரோம் அன்பாக்ஸ்டு வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்த சாதனம் அடுத்த ஆண்டு லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற இருக்கும்  நுகர்வேர் மின்சாதன விழாவில் (CES 2018) அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே வெளியாகலாம் என்ற வகையில் இந்த சாதனத்தின் தயாரிப்பு பணிகள் நிறைவுற்றிருக்கலாம் என எதிரிபார்க்கப்படுகிறது. எனினும் இந்த சாதனம் செப்டம்பர் மாதம் முதல் உருவாக்கப்படுவதாகவும், இதில் இன்டெல் 7-ம் தலைமுறை கேபிலேக் பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி புக் என அழைக்கப்படும் இந்த சாதனத்தில் கழற்றக் கூடிய கீபோர்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனத்தின் குறியீட்டு பெயர் நௌடிலஸ் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனம் இதுபோன்ற குரோம்புக் சாதனங்களை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது.



அந்த வகையில் புதிய சாம்சங் குரோம்புக் சாதனம் விற்பனைக்கு வருவது குறித்த அறிவிப்பு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல்புக் சாதனம் வெளியிடப்பட்டது. இந்த லேப்டாப் இன்டெல் கோர் i5 பிராசஸர் + 128 ஜிபி எஸ்எஸ்டி கொண்ட மாடலின் விலை 999 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று 650 டாலர்களுடன் 200 மற்றும் 650 டாலர்கள் அதிகமான விலையில் இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 360 கோணத்தில் திரும்பும் வசதி வழங்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் விரும்பும் கோணங்களில் சாதனத்தை பயன்படுத்த முடியும்.

சில சிறப்பம்சங்களை பொருத்த வரை கூகுள் பிக்சல்புக் சாதனத்தில் 12.3 இன்ச் ஸ்கிரீன் மற்றும் ரெசல்யூஷன், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூகுள் அசிஸ்டண்ட், குரோம் இயங்குதளம் மற்றும் 10 மணி நேர பேட்டரி பேக்கப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

புதிய சாம்சங் குரோம்புக் சாதனத்தில் எஸ் பென் போன்ற ஸ்டைலஸ் மற்றும் கழற்றக்கூடிய கீபோர்டு உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News