செய்திகள்

டூயல் கேமரா, 6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2017-11-15 13:12 IST   |   Update On 2017-11-15 13:12:00 IST
இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. டூயல் பிரைமரி கேமரா மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:

ஹாங் காங்கை சேர்ந்த இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் உயர் ரக ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இன்ஃபினிக்ஸ் சீரோ 5 மற்றும் சீரோ 5 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன்களும் துபாயில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. 5.98 இன்ச் 1080 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P25 ஆக்டாகோர் சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் இன்ஃபினிக்ஸ் சீரோ 5 ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள இன்ஃபினிக்ஸ் சீரோ 5 4350 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்பட்டுள்ளது.



இன்ஃபினிக்ஸ் சீரோ 5 சிறப்பம்சங்கள்:

- 5.98 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P25 16nm பிராசஸர்
- மாலி-T880 GPU
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் மற்றும் XOS 3.0
- 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX386 சென்சார், f/2.0 அப்ரேச்சர், 1.25μm பிக்சல்
- 13 எம்பி பிரைமரி கேமரா, சாம்சங் S5K3M3 சென்சார், f/2.6 அப்ரேச்சர், 1.0μm பிக்சல்
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4350 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்



இன்ஃபினிக்ஸ் சீரோ 5 ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் கோல்டு மற்றும் போர்டாக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் அறிமுகமான இன்ஃபினிக்ஸ் சீரோ 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளதோடு சான்ட்ஸ்டோன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இன்ஃபினிகிஸ் சீரோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் சீரோ 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிரத்யேகமாக பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை நவம்பர் 22-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது.

இத்துடன் கொயட் 2 வையர்டு மற்றும் கொயட் X வயர்லெஸ் ஹெட்போன்களை முறையே ரூ.2,499 மற்றும் ரூ.6,999 விலையில் அறிமுகம் செய்துள்ளது. எனினும் அறிமுக தினத்தில் இவை முறை ரூ.1,499 மற்றும் ரூ.4,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Similar News