செய்திகள்

வோடபோன் ரீசார்ஜ்களுக்கு 50 சதவிகிதம் கேஷ்பேக்: புதிய திட்டம் அறிவிப்பு

Published On 2017-09-28 05:49 GMT   |   Update On 2017-09-28 05:49 GMT
இன்டெக்ஸ் மற்றும் வோடபோன் நிறுவனங்களிடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதைத் தொடர்ந்து வோடபோன் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ரீசார்ஜ்களுக்கு 50 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
புதுடெல்லி:

இந்திய லஸ்மார்ட்போன் நிறுவனமான இன்டெக்ஸ் வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து ரீசார்ஜ் செய்வோருக்கு 50 சசவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. புதிய கேஷ்பேக் சலுகை இன்டெக்ஸ் நிறுவன 2ஜி மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

இன்டெக்ஸ் 2ஜி மொபைல் போன் பயன்படுத்தும் வோடபோன் வாடிக்கையாளர்கள் ரூ.100க்கும் அதிகமான ரீசார்ஜ் செய்யும் போது ரூ.150 டாக்டைம் பெற முடியும். இந்த கேஷ்பேக் பயன்படுத்தி வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் சேவைகளஐ பயன்படுத்த முடியும். அக்டோபர் 31, 2017 வரை இந்த கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

ஏற்கனவே கிடைக்கும் இன்டெக்ஸ் 2ஜி மொபைல்போன் மற்றும் இனி வரயிருக்கும் 2ஜி மொபைல்போன்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. புதிய கேஷ்பேக் சலுகையானது நவராத்திரியை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ளதாக இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.



பண்டிகை காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கேஷ்பேக் திட்டம் பீச்சர்போன் வாடிக்கையாளர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வாய்ஸ் கால் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என இன்டெக்ஸ் நிறுவன தலைவர் நிதி மார்கண்டே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பண்டிகை காலத்தை சிறப்பிக்கும் வகையில் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் வழங்குவதில் பெருமை கொள்கிறோம் என வோடபோன் இந்தியா நிறுவனத்தின் அவ்னீஷ் கோஸ்லா தெரிவித்தார். இன்டெக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் எங்களது வாடிக்கையாளர்கள் தங்களது உறவினர் மற்றும் நண்பர்களுடன் நீண்ட நேரம் பேசி மகிழ வழி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

கூடுதலாக இன்டெக்ஸ் வழங்கும் புதிய சர்வீஸ் ஆஃபர் அனைத்து 2ஜி மொபைல் போன்களுக்கும் 180 நாட்கள் ரீபிளேஸ்மென்ட் வாரண்டியை வழங்குகிறது. செப்டம்பர் 1, 2017 முதல் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும் மொபைல் போன்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News