செய்திகள்

எல்ஜி நிறுவனத்தின் கொசுவிரட்டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது

Published On 2017-09-28 04:30 GMT   |   Update On 2017-09-28 04:30 GMT
எல்ஜி நிறுவனம் K சீரிஸ்-இல் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. எல்ஜி K7i என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் கொசுவிரட்டும் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
புதுடெல்லி:

எல்ஜி நிறுவனத்தின் K3 (2017) மற்றும் எல்ஜி K4 (2017) ஸ்மார்ட்போன்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையி்ல், எல்ஜி நிறுவனம் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி K7i என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் எல்ஜி கொசுக்களை விரட்டும் புதிய தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது.

புதிய எல்ஜி K7i ஸ்மார்ட்போனுடன் பின்புற கவர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த கவர் வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப பொறுத்திக் கொள்ள முடியும். இந்த கவரில் உள்ள ஸ்பீக்கர் அல்ட்ராசோனிக் கதிர்களை வெளிப்படுத்தி கொசுக்களை விரட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய எல்ஜி K7i ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. புதுடெல்லியில் நேற்று துவங்கிய இந்திய மொபைல் காங்கிரஸ் விழாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.



எல்ஜி K7i சிறப்பம்சங்கள்:

- 5.0 இன்ச் ஆன்செல் டிஸ்ப்ளே
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 8 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ
- வைபை, ப்ளூடூத்
- 2500 எம்ஏஎச் பேட்டரி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ

மேலே வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் மட்டுமின்றி புதிய எல்ஜி K7i ஸ்மார்ட்போனில் கொசுக்களை விரட்டியடிக்கும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பமானது 30KHz அல்ட்ராசோனிக் சத்தத்தை ஏற்படுத்தி கொசுக்களை விரட்டும். மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத அல்ட்ராசோனிக் சத்தம் ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் கூடுதல் கவர் மூலம்  ஸ்மார்ட்போனில் இணைத்துக் கொள்ள முடியும்.

இந்தியாவில் எல்ஜி K7i ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோடு, இந்தியாவில் உள்ள பெரும்பாலான விற்பனை மையங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News