செய்திகள்

ஆப்பிள் புதிய சாதனங்கள் அடுத்த வாரம் வெளியாகலாம்

Published On 2017-03-14 18:17 IST   |   Update On 2017-03-14 18:17:00 IST
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சாதனங்கள் அடுத்த வாரம் வெளியாகலாம் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் மார்ச் மாதம் புதிய ஐபோன் வெளியிடப்படலாம் என குறிப்பிடப்பட்டது.
சான்பிரான்சிஸ்கோ:

ஆப்பிள் சார்பில் அறிமுக விழா மார்ச் மாத வாக்கில் நடைபெறும் என ஏற்கனவே வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன. எனினும் இது குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வித விளக்கமும் வழங்கவில்லை. 

அதன் படி தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சாதனங்கள் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவித்துள்ளன. மார்ச் 20 முதல் மார்ச் 24 வரையிலான காலகட்டத்தில் ஆப்பிள் அறிமுக விழா நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதற்கான விழா அழைப்பிதழ்கள் விரைவில் அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.



அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஆப்பிள் அறிமுக விழாவில் என்னென்ன ஆப்பிள் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் ஆப்பிளின் புதிய ஐபேட் அறிமுக விழா மே அல்லது ஜூன் மாதம் நடைபெறலாம் என கூறப்பட்டுள்ளது. மற்றொரு தகவலில் ஆப்பிள் ஐபேட் சாதனம் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்பட்டது. 
 
முன்னதாக வெளியான தகவல்களில் மார்ச் மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படும் ஆப்பிள் விழாவில் சிவப்பு நிற ஐபோன் 7, 128 ஜிபி மெமரி கொண்ட ஐபோன் se மற்றும் மூன்று புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் - 9.7 இன்ச், 10.5 இன்ச், 12.9 இன்ச் திரை கொண்ட மாடல்களுடன் ஐபேட் மினி ஒன்றும் வெளியாகும் என கூறப்பட்டது.

Similar News