தமிழ்நாடு செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை வாங்குவோர் நகை போடக்கூடாதா?- அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

Published On 2025-08-22 12:51 IST   |   Update On 2025-08-22 12:51:00 IST
  • நலத்திட்டங்களை தருகிறோம் என்ற பெயரில் தி.மு.க. அமைச்சர்கள் பெண்களை ஏளனமாக பேசுவது கண்டிக்கத்தக்கது.
  • மூக்கு, காதில் எல்லாம் நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்கமாட்டோம் என சாத்தூர் ராமச்சந்திரன் பேசி உள்ளார்.

விருதுநகர் மாவட்டம் முள்ளிச்சேவலில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மனு கொடுக்க வந்தனர்.

அந்த பெண்களிடம், இப்படி நகை போட்டு வந்தால் எப்படி பணம் கிடைக்கும்? நகை அணிந்து வந்தால் உரிமைத்தொகை கிடைக்காது என்று நகைச்சுவையாக அவர் கூறினார்.

இதுதொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது:

* நலத்திட்டங்களை தருகிறோம் என்ற பெயரில் தி.மு.க. அமைச்சர்கள் பெண்களை ஏளனமாக பேசுவது கண்டிக்கத்தக்கது.

* விருதுநகர் அருகே உரிமைத்தொகை கேட்ட பெண்களிடம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நாகரிகமற்ற வகையில் பேசி உள்ளார்.

* மூக்கு, காதில் எல்லாம் நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்கமாட்டோம் என சாத்தூர் ராமச்சந்திரன் பேசி உள்ளார்.

* அரசு பதவியின் மாண்பை மறந்து இதுபோன்ற கேலி கிண்டல்களில் ஒரு அமைச்சர் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.

* ரூ.1000 உரிமைத்தொகை வாங்குவோர் எல்லாம் நகை போடக்கூடாதா?

* உரிமைத்தொகை கேட்ட பெண்களிடம் நாகரிகமற்ற வகையில் பேசிய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News