தமிழ்நாடு செய்திகள்
பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 161-ம் இடத்திற்கு சரிந்தது ஏன்?- முதலமைச்சர் கேள்வி
- பாஜக ஆட்சி கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சுவதால் செய்தியாளர்களை சிறையில் அடைக்கிறது.
- நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்மையை தெரிந்து கொள்ளவும், கேள்வி கேட்கவும் உரிமை உள்ளது.
பத்திரிகை சுதந்திரத்தில் உலகளவிலான பட்டியலில் இந்தியா 161 ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பத்திரிகை சுதந்திரத்தில் உலகளவிலான பட்டியலில் இந்தியா 161 ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்?
பாஜக ஆட்சி கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சுவதால் செய்தியாளர்களை சிறையில் அடைக்கிறது. ஊழல், உரிமை மீறல்கள் நிகழ்வுகளை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளின் வாயை பாஜக அடைக்கிறது.
அச்சமற்ற பத்திரிகை இல்லையெனில் ஜனநாயகம் இருளில் மாண்டுவிடும், எனவே பத்திரிகை சுதந்திரத்தை காக்க வேண்டும்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்மையை தெரிந்து கொள்ளவும், கேள்வி கேட்கவும் உரிமை உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.