தமிழ்நாடு செய்திகள்

பலத்த காற்றால் திடீரென சரிந்த கட்அவுட்: நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி..!

Published On 2025-08-16 18:24 IST   |   Update On 2025-08-16 18:24:00 IST
  • செங்கத்தில் சாலையின் குறுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்தது.
  • எடப்பாடி பழனிசாமி வாகனம் சென்ற சில வினாடிகளில் சரிந்ததால் தப்பினார்.

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எழுச்சி பேரணியை மேற்கொண்டுள்ளார். தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்கிறார். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி சாலையின் இரண்டு பக்கத்திலும் கொடிகள் கட்டப்பட்டிருந்தது. சாலையில் வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்து.

செங்கத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று சாலையின் குறுக்கே பேனர் வைக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பேருந்து இந்த வரவேற்று பேனரை கடந்து சுமார் 50 அடி தூரம் சென்றிருக்காது. பலத்த காற்றால் திடீரென அந்த பேனர் சரிந்து சாலையில் விழுந்தது. பேருந்து கடந்த நிலையில் பேனர் விழுந்ததால், நூலிழையில் தப்பினார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேனர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.

Tags:    

Similar News