தமிழ்நாடு செய்திகள்
கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு- புழல் ஏரியில் இருந்து 700 கன அடி நீர் திறப்பு
- பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- புழல் ஏரிக்கு விநாடிக்கு 325 கன அடி நீர்வரத்து உள்ளது.
சென்னை புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 700 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் நீர்திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு விநாடிக்கு 325 கன அடி நீர் வரத்து உள்ளது.
3,300 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரியில் 3,006 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அதாவது, 21 அடி உயரம் கொண்ட ஏரியில் நீர்மட்டம் 19 அடி உள்ளது.