தமிழ்நாடு செய்திகள்
null

வீடியோ: வானத்தில் தோன்றிய Blood Moon - பிரமிக்க வைத்த முழு சந்திர கிரகணம்!

Published On 2025-09-08 01:16 IST   |   Update On 2025-09-08 02:26:00 IST
  • சந்திரன் படிப்படியாக சிவப்பு நிறமாக மாறுவதைக் மக்கள் கண்டு ரசித்தனர்.
  • இன்றைய முழு சந்திர கிரகண நிகழ்விற்கு பிறகு அடுத்து 2028 ம் ஆண்டுதான் அடுத்த முழு சந்திர கிரகணம் நிகழும்.

இந்திய நேரப்படி, நேற்று (செப்டம்பர் 7) இரவு 9:58 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கியது. முழு கிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.23 மணி வரை மொத்தம் 82 நிமிடங்கள் நீடித்தது.

இதைத்தொடர்ந்து பகுதி கிரகணம் இரவு 1.26 மணிக்கு முடிவடைந்த நிலையில், 2.25 மணிக்கு பின்னர் புறநிழல் பகுதியில் இருந்து நிலா வெளியேறி சந்திர கிரகணம் முழுமையாக முடிவடைந்தது. 

இது 2022 க்குப் பிறகு மிக நீண்ட கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

உலகின் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சந்திரகிரகணத்தை மக்கள் கண்டு வியந்தனர். இந்தியாவில் சில பகுதிகளில் மழையின் காரணமாக கிரகணம் புலப்படவில்லை. தமிழ்நாட்டில் சந்திர கிரகணத்தை தெளிவாக காண முடிந்தது. 

இரவு 11:01 மணிக்கு, பூமியின் நிழல் சந்திரனை முழுவதுமாக மறைத்தது, இதன் காரணமாக சந்திரனின் நிறம் சிவப்பு நிறமாக மாறியது. சந்திரன் படிப்படியாக சிவப்பு நிறமாக மாறுவதைக் மக்கள் கண்டு ரசித்தனர். இந்த நிலவை 'Blood Moon' என்று அழைக்கின்றனர். 

கிரகணம் படிப்படியாக முடிவடைந்து நிலவு அதன் உண்மை நிறத்திற்கு மாறத் தொடங்கியது. 

இந்த அரிய வானியல் நிகழ்வை கண்டுகளிப்பதற்கு பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இன்றைய முழு சந்திர கிரகண நிகழ்விற்கு பிறகு அடுத்து 2028 ம் ஆண்டுதான் அடுத்த முழு சந்திர கிரகணம் நிகழும்.   

Tags:    

Similar News