தமிழ்நாடு செய்திகள்
தமிழில் இருந்து தான் கன்னடம் தோன்றியது - கமலின் கருத்துக்கு வேல்முருகன் ஆதரவு
- தமிழகத்தில் கன்னட படங்களை வெளியிட முடியாது.
- கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.
சென்னை:
நடிகருக்கும், மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்புகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழில் இருந்து தோன்றியது கன்னடம் என்று கமல்ஹாசன் பேசியதற்கு வேல்முருகன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், கமலின் தக் லைப் படத்தை கர்நாடகவில் வெளியிடாவிட்டால் தமிழகத்தில் கன்னட படங்களை வெளியிட முடியாது.
கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.