சபாநாயகருடன் முரண்பாடு- முதலமைச்சரை சந்தித்து பேசுகிறாரா வேல்முருகன்?
- நேற்று சட்டசபையில் பேச தனக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என சபாநாயகர் மீது வேல்முருகன் குற்றச்சாட்டி வெளிநடப்பு செய்து இருந்தார்.
- தான் பேசும்போதெல்லாம் சபாநாயகர் இடையூறு செய்வதாக குற்றம்சாட்டி புறக்கணித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நேற்று சட்டசபையில் பேச தனக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என சபாநாயகர் மீது வேல்முருகன் குற்றச்சாட்டி வெளிநடப்பு செய்து இருந்தார்.
இந்த நிலையில், நேற்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த வேல்முருகன் இன்று சட்டசபை கூட்டத்தை புறக்கணித்துள்ளார். தான் பேசும்போதெல்லாம் சபாநாயகர் இடையூறு செய்வதாக குற்றம்சாட்டி புறக்கணித்துள்ளார்.
சபாநாயகர் செயல்பாடு குறித்து நாளை முதலமைச்சரை சந்தித்து பேசவும் வேல்முருகன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, இந்த கூட்டத்தொடரில், என்னை மட்டும் குறிவைத்து, பேசவிடாமல் சபாநாயகர் தடுப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியிருந்தார். இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேல்முருகன் மீது கடிந்து கொண்டார். இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வேல்முருகன் விளக்கம் அளித்து இருந்தார்.