தமிழ்நாடு செய்திகள்
மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது- மகளிர் தின வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்
- சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
- மகளிர் ஏற்றத்துக்கு என்றும் அயராது உழைத்திடுவோம். மகளிர் உரிமைகளை நிலைநாட்டிடுவோம்.
சென்னை:
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது.
கல்வி - பண்பாடு - கலாச்சாரம் - பொருளாதாரம் என பல்வேறு தளங்களில் மகளிரின் தற்சார்பையும் - சுதந்திரத்தையும் உறுதி செய்வதே திராவிட இயக்கத்தின் லட்சியம்.
அதனை, பெரியார் - அண்ணா - கலைஞர் அவர்கள் வழியில், மகளிர் விடியல் பயணம் - புதுமைப்பெண் - கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் போன்ற மகளிர் நல திட்டங்கள் மூலம் நம் முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.
மகளிர் ஏற்றத்துக்கு என்றும் அயராது உழைத்திடுவோம். மகளிர் உரிமைகளை நிலைநாட்டிடுவோம் என்று கூறியுள்ளார்.