தமிழ்நாடு செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்

Published On 2025-02-26 08:42 IST   |   Update On 2025-02-26 22:11:00 IST
2025-02-26 05:08 GMT

2-ம் ஆண்டு தொடக்க விழாவில் த.வெ.க. தலைவர் விஜயின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.

2025-02-26 04:58 GMT

கிராமிய பாட்டு பாடிய கிடாக்குடி மாரியம்மாளுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார். மேலும், அவரது குழுவினருடன் த.வெ.க. தலைவர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

2025-02-26 04:43 GMT

த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் Get Out கையெழுத்து இயக்கம் தொடங்கியதை அடுத்து கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

2025-02-26 04:36 GMT

'Get Out' கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் விஜய்



2025-02-26 04:30 GMT

த.வெ.க. 2-ம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் முன்னிலையில் பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய முக்கிய பிரமுகர்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-02-26 04:18 GMT

வெளியே காக்க வைக்கப்பட்ட தொண்டர்கள் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். உள்ளே போதுமான அளவு இருக்கைகள் இல்லாததால் பலர் அரங்கிற்குள் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.

2025-02-26 04:08 GMT

பொதுக்கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு வருகை தந்தார் விஜய்

2025-02-26 03:57 GMT

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மதிய சைவ விருந்து பட்டியல்

1)கேரட் அல்வா

2) மசால் வடை

3)காலி ஃபிளவர் 65

4) பூரி

5) உருளைக்கிழங்கு பட்டாணி குருமா

6) வெஜ் பிரியாணி

7) தயிர் பச்சடி

8) சாதம்

9) கதம்ப சாம்பார்

10) அப்பளம்

11) பூசனிக்காய், சௌ சௌ, கேரட்,பீன்ஸ் கூட்டு

12) பீன்ஸ் பருப்பு உசிலி

13 ரசம்

14) மோர்

15) சால்ட்

16) வாழைப்பழம்

17) வெண்ணிலா ஐஸ்கிரம்

19) ஊறுகாய்

20) வாட்டர் பாட்டில்

21) அடை பிரதமம்

2025-02-26 03:48 GMT

த.வெ.க. பொதுக்கூட்டத்திற்கு பாஸ் இருந்தும் அனுமதி மறுக்கப்படுவதால் தொண்டர்கள் அதிர்ச்சி. உள்ளே தேவையான அளவு இருக்கைகள் இல்லாததால் தொண்டர்கள் வெளியே நிறுத்தப்பட்டுள்ளனர்.

2025-02-26 03:41 GMT

த.வெ.க. 2-ம் ஆண்டு விழா நடைபெறும் அரங்கில் தேவையான அளவு இருக்கைகள் இல்லாததால் தொண்டர்கள் வெளியே நிறுத்தப்பட்டனர். இருக்கை இல்லாததால் தொண்டர்கள் பிளாஸ்டிக் நாற்காலியுடன் காத்திருக்கின்றனர். கூட்ட அரங்கிற்குள் தொண்டர்கள் நுழைய முடியாததால் பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது. 

Tags:    

Similar News