தமிழ்நாடு செய்திகள்
டங்ஸ்டன் சுரங்க விவகாரம்- முதலமைச்சரின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது: கமல்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெஞ்சுரத்தோடு எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு பாராட்டத்தக்கது.
- இயற்கை காக்கப்பட வேண்டும் என்பதில் அவருக்கிருக்கும் ஈடுபாட்டையும் தெளிவுபடக் காட்டுகிறது.
சென்னை:
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது:-
மக்களின் விருப்பத்துக்கு மாறாக அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையக் கூடாது என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெஞ்சுரத்தோடு எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு பாராட்டத்தக்கது.
'நான் முதலமைச்சராக இருக்கும்வரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது' என்று முதலமைச்சர் சட்டசபையில் பேசியிருப்பது மக்கள் மீதான அவரது அக்கறையையும் இயற்கை காக்கப்பட வேண்டும் என்பதில் அவருக்கிருக்கும் ஈடுபாட்டையும் தெளிவுபடக் காட்டுகிறது.
மக்கள் பிரச்சனையை நெஞ்சுக்கு நெருக்கமாக அணுகும் முதலமைச்சர் அவர்களின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனமாரப் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.