தமிழ்நாடு செய்திகள்
உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.
- சுற்றுலா பயணிகள் இன்று அருவியில் குளிக்க வந்திருந்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று அருவியில் குளிக்க வந்திருந்தனர். தடை காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்து சென்றனர். தண்ணீர் வரத்து சீரானதும் மீண்டும் அருவியில் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.