தமிழ்நாடு செய்திகள்
LIVE

Tamil News Live: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்... லைவ் அப்டேட்ஸ்

Published On 2026-02-17 09:23 IST   |   Update On 2026-02-17 13:12:00 IST
2026-02-17 06:45 GMT

எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க ரூ.229 கோடி ஒதுக்கீடு- அமைச்சர்

2026-02-17 06:43 GMT

உரம் விதைகளை வழங்க ஆயிரம் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

2026-02-17 06:43 GMT

வேளாண் துறையில் இளைஞர்களை தொழில் முனைவோராக்க ரூ.4.56 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளன. 

2026-02-17 06:42 GMT

கடந்த ஆண்டை விட 3 லட்சம் ஏக்கர் கூடுதலாக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

2026-02-17 06:41 GMT

2025-26-ம் ஆண்டில் 12.45 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

2026-02-17 06:41 GMT

மரங்களை வெட்டி எடுத்துச்செல்லும் விதிகளை தளர்த்தும் வகையில் புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படும். 

2026-02-17 06:41 GMT

482 கோடியில் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு 19.51 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

2026-02-17 06:40 GMT

70 ஆயிரம் விவசாயிகளுக்கு நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 

2026-02-17 06:39 GMT

மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 21.35 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்- அமைச்சர்

2026-02-17 06:39 GMT

நெல் ஜெயராமன் திட்டத்தில் 900 மெ.டன் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம்.

Tags:    

Similar News