Tamil News Live: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்... லைவ் அப்டேட்ஸ்
5 ஆண்டுகளில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மூலம் ரூ.101 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் 38 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,397 கோடியில் நத்திட்டங்கள்.
வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.6,045 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள்
நகராட்சி நிர்வாகத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,227 கோடி ஒதுக்கீடு- பட்ஜெட்டில் அறிவிப்பு
கடந்த 5 ஆண்டுகளில் 87 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.28,687 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 20,484 கி.மீ. சாலைகள் மேம்பாடு.
1.14 லட்சம் வீடுகள் ரூ.969 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டுள்ளன- அமைச்சர் தங்கம் தென்னரசு
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டுகின்றன- இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழ்நாட்டிற்கு பதக்கம் பெற்றுத் தந்த 5403 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.176 கோடி பரிசு