Tamil News Live: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்... லைவ் அப்டேட்ஸ்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்கீடு
அதிகம் அறியப்படாத 22 சுற்றுலா தலங்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
சுற்றுலாத்துறையில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
120 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது- அமைச்சர்
சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.16 கோடி ஒதுக்கீடு
கோவிலுக்குச் சொந்தமான 8111 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
84 கோவில்களில் ரூ.425 கோடி செலவில் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் 12,931 கோவில்களில் ரூ.8100 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு
தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் புனரமைப்புக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு