தமிழ்நாடு செய்திகள்
LIVE

Tamil News Live: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்... லைவ் அப்டேட்ஸ்

Published On 2026-02-17 09:23 IST   |   Update On 2026-02-17 13:12:00 IST
2026-02-17 05:23 GMT

கல்வி உதவித்தொகைக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

2026-02-17 05:23 GMT

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 29 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1,317 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 

2026-02-17 05:22 GMT

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு.

2026-02-17 05:21 GMT

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் ரூ.160 கோடியில் 385 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். 

2026-02-17 05:21 GMT

சென்னையில் உள்ள எம்.சி.ராஜா விடுதி, ரூ.44 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. 

2026-02-17 05:20 GMT

ரூ.1000 கோடியில் அயோத்திதாசர் குடியிருப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2026-02-17 05:20 GMT

விளிம்பு நிலை மக்களுக்கான நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 

2026-02-17 05:19 GMT

புதிய மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு நில எடுப்புப் பணிகளுக்கு அரசு நிர்வாகம் ஒப்புதல்

2026-02-17 05:18 GMT

சென்னையில் தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே ரூ.671 கோடியில் உயர்மட்ட சாலை பணிகள் நடைபெற்று வருகிறது- அமைச்சர்

2026-02-17 05:17 GMT

1,168 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டு உள்ளது- அமைச்சர்

Tags:    

Similar News