தமிழ்நாடு செய்திகள்
இன்றைய முக்கிய செய்திகள்: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்.. லைவ் அப்டேட்ஸ்
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று (டிசம்பர் 16) காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது இன்றும், நாளையம் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும்.
இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர பகுதிகள் மற்றும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.