சென்னை ஐஐடியை சேர்ந்த 3 பேராசியர்களுக்கு மத்திய அரசின் ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் விருது
- விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவா- சாந்தி ஸ்வாரப் பாட்நகர், விஞ்ஞான் டீம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
- விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவா- சாந்தி ஸ்வாரப் பாட்நகர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஐஐடி-யை சேர்ந்த 3 பேராசிரியர்கள் 2025ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது..
மோகனசங்கர் சிவப்பிரகாசம், பிரதீப், ஸ்வேதா பிரேம் அகர்வால் ஆகிய பேராசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திய சிறந்த சாதனைகள் மற்றும் வாழ்நாள் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் வழங்கப்படுகிறது.
இந்த விருது விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவா- சாந்தி ஸ்வாரப் பாட்நகர், விஞ்ஞான் டீம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
வேதியியல் துறையைச் சேர்ந்த பிரதீப் விஞ்ஞான் ஸ்ரீ விருதுக்கும், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறையைச் சேர்ந்த மோகனசங்கர் சிவப்பிரகாசம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ட்ஸ் மற்றும் என்ஜினீயரிங் துறையைச் சேர்ந்த ஸ்வேதா பிரேம் அகர்வால் விஞ்ஞான் யுவா- சாந்தி ஸ்வாரப் பட்நகர் விருதுக்கும் தேர்வு செய்யபப்பட்டுள்ளனர்.