தமிழ்நாடு செய்திகள்

இது ஒரு 'பேக்கரி' டீலிங்.. அதிமுக - பாஜக பற்றி அமைச்சர் சிவசங்கர் சட்டமன்றத்தில் பேச்சு

Published On 2025-04-21 12:44 IST   |   Update On 2025-04-21 12:44:00 IST
  • நீங்கள் கொண்டு வந்தீர்கள் என திமுகவினரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
  • இது வடிவேலு காமெடியில் வருவது போல பேக்கரி டீலிங்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை யார் கொண்டு வந்தது என்பது தொடர்பாக இன்று கூடிய சட்டமன்றத்தில் அதிமுக - திமுக இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.

அதிமுக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, எத்தனை மருத்துவக் கல்லூரிகளை நீங்கள் கொண்டு வந்தீர்கள் என திமுகவினரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

இந்த விவாதம் நடந்து கொண்டுருந்தபோது எழுந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அதிமுக ஆட்சி காலத்தில் நீங்கள் 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டுவந்ததாக கூறுகிறீர்கள்.

ஆனால் இது வடிவேலு காமெடியில் வருவது போல பேக்கரி டீலிங். நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்து விட்டு, அதற்கு பதிலாக 11 மருத்துவக்கல்லூரிகளை பெற்றீர்கள் என்று தெரிவித்த சிவசங்கர், இது ஒரு பேக்கரி டீலிங் என மூன்று முறை முழக்கம் எழுப்பினார்.

Tags:    

Similar News