தமிழ்நாடு செய்திகள்
உலக வரலாற்றில் என்னளவுக்குத் தோற்ற மகன் சரித்திரத்திலேயே கிடையாது - சீமான்
- 2014 இல் தேர்தல் களத்திற்கு வந்தேன்.
- தற்போது நாம் தமிழர் கட்சி மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்ற பேரியக்கம் நாம் தமிழர் கட்சி மட்டும் தான்.
உலக வரலாற்றில் என்னளவுக்குத் தோற்ற மகன் சரித்திரத்திலேயே கிடையாது. 2014 இல் தேர்தல் களத்திற்கு வந்தேன். 1.1 விழுக்காடு வாக்குகள் பெற்று நான் தோல்வியை சந்தித்தேன். எந்தவொரு அரசியல் இயக்கமும் அந்த மாதிரி ஒரு தோல்வியை சந்தித்து உயிரோடு இருந்ததில்லை.
ஆனால் நாங்கள் மறுபடியும் நின்று 5 விழுக்காடு வாக்குகள் பெற்றோம். மாற்றிப்பாடியும் நின்று 7-8 விழுக்காடு பெற்றோம்.
தற்போது 8.5 விழுக்காடு பெற்று தனித்து நின்று மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றோம்" என்று தெரிவித்தார்.