தமிழ்நாடு செய்திகள்

நாகையில் நாளை விஜயின் மக்கள் சந்திப்பு- தொண்டர்களுக்கு த.வெ.க. தலைமை அறிவுறுத்தல்

Published On 2025-09-19 15:45 IST   |   Update On 2025-09-19 15:45:00 IST
  • கிரில் கம்பிகள், தடுப்புகள் மேலே கண்டிப்பாக ஏறக் கூடாது.
  • விஜயின் வருகையின்போது பட்டாசு வெடிப்பதை தோழர்கள் தவிர்க்க வேண்டும்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி தவெக தலைமை தொண்டர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை

விஜயின் மக்கள் சந்திப்பிற்கு வரும் தொண்டர்களுக்கு 12 வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

முதியவர், பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணி, கை்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள் விஜய் பரப்புரைக்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின்விளக்கு கம்பங்கள், உயரமாக இடங்கள் மேலே ஏற வேண்டாம்.

காவல்துறையின் அறிவுறுத்தல்படி அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும்.

தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு வருபவர்கள் பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ, நடந்து கொள்ளவோ கூடாது.

சாலையின் இருபுறமும் பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள், கொடி கட்டப்பட்ட கம்பிகளை உரிய அனுமதியின்றி வைக்கக்கூடாது.

விஜயின் வருகையின்போது பட்டாசு வெடிப்பதை தோழர்கள் தவிர்க்குமாறும் தவெக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் காவல்துறையின் விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் எனவும் தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News