நபிகள் கூறிய சமத்துவத்தை தான் தந்தை பெரியாரும் முன்மொழிந்தார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- நமது நடத்தை அனைவருக்குமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றவர் நபிகள் நாயகம்.
- இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எப்போதும் நிற்கும் அரசியல் இயக்கம் திமுக.
நபிகள் நாயகம் 1500வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
அண்ணாவும், கலைஞரும் சந்தித்துக் கொண்டது மிலாது நபி விழாவில் தான். இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் அந்த சந்திப்பின்போது தான் அமைந்தது.
இந்த மேடையில் இருப்பவர்கள் அனைவருக்கும் இடையிலான ஒற்றுமை நீடிக்க வேண்டும்.
நமது நடத்தை அனைவருக்குமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றவர் நபிகள் நாயகம்.
நபிகள் கூறிய சமத்துவத்தை தான் தந்தை பெரியாரும் முன்மொழிந்தார்.
காசாவில் அரங்கேறும் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காசாவில் அமைதியை ஏற்படுத்துவதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும்.
மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எப்போதும் நிற்கும் அரசியல் இயக்கம் திமுக.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக உள்ள இயக்கம் திமுக. பாஜகவிற்கு துணை போகிற இயக்கங்களை புறகணிக்க வேண்டும்.