தமிழ்நாடு செய்திகள்

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2025-06-28 14:59 IST   |   Update On 2025-06-28 14:59:00 IST
  • தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தஞ்சாவூர்:

வேளாண் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

அதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், வி.ச மாவட்ட செயலாளர் பாஸ்கர், கரும்பு விவசாயிகள் சங்கம் கோவிந்தராஜ், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏகேஆர்.ரவிச்சந்தர், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க தலைவர் முகமது இப்ராஹிம், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் பழநிஅய்யா, துணை தலைவர் கோவிந்தராஜ், அறிவழகன், சி.ஐ.டி.யூ அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News