தமிழகம், புதுச்சேரியில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
- கேரளா கடலோர பகுதிகள், தெற்கு கர்நாடகா மற்றும் கொங்கன், கோவா ஆகிய இடங்களில் இன்று அதிகனமழை பெய்யும்.
- மத்திய அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கேரளா கடலோர பகுதிகள், தெற்கு கர்நாடகா மற்றும் கொங்கன், கோவா ஆகிய இடங்களில் இன்று அதிகனமழை பெய்யும்.
தமிழ்நாடு, வடக்கு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் மிக கனமழையும், குஜராத்தில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கொங்கன் கடற்கரை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என்று தெரிவித்து உள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடுத்து தமிழகம், புதுச்சேரியில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்காலிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.