9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
- பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் உருவானது. இது நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது.
மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரைகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அமைந்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று அதிகாலை தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா கடற்கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் வங்கக்கடலின் வடக்குப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை ஒட்டி பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.