தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று தமிழக மீனவர்கள் 14 பேர் இன்று விடுதலை- இலங்கை அரசு நடவடிக்கை

Published On 2025-04-06 13:05 IST   |   Update On 2025-04-06 13:05:00 IST
  • இலங்கை அரசு இன்று நல்லெண்ண அடிப்படையில் விடுவித்தது.
  • விசைப் படகுகளும் விரைவில் விடுவிக்கப்படும்.

ராமேசுவரம்:

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளது.

3 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிபர் அநுரா குமார திசநாயகேவை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து இலங்கை அதிபரிடம் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப்பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதம் நடத்தியதாக தெரிவித்தார்.

மேலும், அவர் 'மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்' என்றார்.

இந்தநிலையில் இலங்கை பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துவிட்டு பிரதமர் மோடி கிளம்பினார். இதற்கி டையே பிரதமர் மோடியின் வேண்டுகோள் மற்றும் வலியுறுத்தலை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு இன்று நல்லெண்ண அடிப்படையில் விடுவித்தது. அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள். இதற்கான ஏற்பாடுகள் அனைத்து விரைவாக நடந்து வருகிறது.

அதேபோல் மீனவர்க ளுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான விசைப் படகுகளும் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் உள்ளனர். மேலும் இலங்கை சிறையில் வாடும் மற்ற தமிழக மீனவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை தமிழக மீனவர்கள் மனதில் துளிர்த்துள்ளது.

Tags:    

Similar News